பாலமுனையில் தேசிய உணவு புரட்சி வாரம்




ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய செயற்படுத்தப்பட்டு வரும், தேசிய உணவு புரட்சி வாரத்தினை முன்னிட்டு, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதான நிகழ்வு, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாலமுனை விவசாயக் கல்லூயில் நேற்று (06) பிற்பகல் இடம்பெற்றது.
விவசாயக் கல்லூரியின் அதிபரும், மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளருமான எம்.எப்.ஏ. சனீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துஷித பீ. வணிகசிங்க பிரதம அதிதியாகக்க கலந்து சிறப்பித்ததுடன், மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.ஐ.ஏ. கலீஸ், விவசாய திணைக்களத்தின் விவசாய விரிவாக்கல் மற்றும் பயிற்சிப் பணிப்பாளர் அமல் அனுரபிரிய மற்றும் நீர்ப்பாசனப் பணிப்பாளர் ஆகியோரும் கலந்துக்  கொண்டனர்.
இந்நிகழ்வில் விவசாயக் கல்லூரி மாணவர்களின் விவசாய உற்பத்திக் கண்காட்சி இடம்பெற்றதோடு, அறுவடையும் இடம்பெற்றது இதன்போது சிறந்த விவசாயிகளுக்கான விவசாய உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் கல்லூரியில் கற்கை நெறியை பூர்த்தி செய்த 23 மாணவர்களுக்கான டிப்லோமா சான்றிதலும் இதன் போது அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன. 
(படப்பிடிப்பு -ரீ.கே.றஹ்மத்துல்லா)