களனி பல்கலைக்கழகம் மூடப்பட்டது




களனி பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவர்கள் குழுவிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பல்கலைக் கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களும் இவ்வாறு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. 

அதன்படி இன்று (05) நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் அனைத்து மாணவர்களும் பல்கலைக்கழக வளாகம் மற்றும் மாணவர் விடுதியில் இருந்து வௌியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

மறு அறிவித்தல் வரும் வரை மாணவர்கள் எவரும் பல்கலைக்கழக வளாகத்தில் இருப்பதற்கு தடை விதித்து அறிவிக்கப்பட்டுள்ளது.