பொதுநலவாய விளையாட்டு விழாவிற்கான உத்தியோகபூர்வ சுடர் இம்மாதம் 12 ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளது.
21 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழா அடுத்த ஆண்டு அவுஸ்திரேலியாவின் கோல்கோஸ்ட்டில் நடைபெறவுள்ளது.
இந்த விளையாட்டு விழா கனவுகளை பகிர்ந்துக் கொள்ளுதல் எனும் தொனிப்பொருளில் அமையவுள்ளது.
விளையாட்டு விழாவின் அங்குரார்ப்பண நிகழ்வு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி இடம்பெறவுள்ளதோடு இதற்கான சுடர் இத்தினங்களில் இந்தியாவில் வலம் வருகிறது.
பிரித்தானிய அரச குடும்பத்தின் மரியாதைகளோடு கடந்த மூன்றாம் திகதி குறித்த சுடர் இந்தியாவை வந்தடைந்தது.
388 நாட்களை உள்ளடக்கிய வகையில் சுடர் 70 நாடுகளுக்கு பயணிக்கவுள்ளதோடு இந்த பயணம் 23,000 கிலோ மீற்றர் தூரத்தை உள்ளடக்கிய வகையில் அமையவுள்ளது.
விளையாட்டு விழாவிற்கான சுடர் இந்தியாவின் ஆக்ராவில் நேற்றைய தினம் வலம் வந்ததோடு , இதில் இந்தியாவின் விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகள் பலர் கலந்துக் கொண்டிருந்தனர்.
இம்மாதம் 07 ஆம் திகதி வரை இந்த சுடர் இந்தியாவில் வலம் வரவுள்ளதோடு அதனை தொடர்ந்து பங்களாதேஷை சென்றடையவுள்ளது.
இம்மாதம் 12 ஆம் திகதி விளையாட்டு விழாவிற்கான சுடர் இலங்கையை வந்தடையவுள்ளது.
இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறினேச இந்த சுடரை உத்தியோகபூர்வமாக ஏந்தவுள்ளார்.
அதனை தொடர்ந்து பொதுநலவாய விளையாட்டு விழாவிற்கான உத்தியோகபூர்வ சுடர் இலங்கையின் பல நகரங்களில் வலம் வரவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment
Post a Comment