வாகனங்களின் போக்குவரத்தினை அவதானிக்க, அதிநவீன தொழிநுட்பத்திலான இலக்கத்தகடு ஒன்றினை, அனைத்து வாகனங்களுக்கும் பொருத்தும் முறையினை அறிமுகம் செய்ய, மோட்டார் வாகனத்திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
இந்த அதிநவீன தொழிநுட்பத்திலான இலக்கத்தகடு முறையை, அடுத்த வருடத்திலிருந்து நடைமுறைக்கு கொண்டுவர இருப்பதாக, அத்திணைக்களத்தின் ஆணையாளர் ஜகத் சந்திரசிறி தெரிவித்தார்.
இதனால், பல குற்றங்களை செய்துவிட்டு, தப்பிச் செல்லும் வாகனங்களை விரைவில் கண்டுபிடிக்க முடியும் என, அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Post a Comment
Post a Comment