சர்வதேச பொலிசான- இன்ரர் போல் மூலம் பிடிவிறாந்து, பிறப்பிக்கப்பட்டவரான இரேஷா, நேற்று மாலை அபுதாபியில் இருந்து வெளியேற்றப் பட்டார். இன்று அதிகாலை விமானம் மூலம் நாடுதிரும்பிய வேளையில் அவர் விமான நிலையத்தில் வைத்து கைதானதாக குடிவரவுத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் முன்னைநாள் செயலாளரான படபொல ஆராச்சிகே ஓரநெல்லாஇரேஷா கைது! கைது செய்யப்பட்டுள்ளார்.
30 மில்லியன் ரூபாவை சட்டமுரணாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு சொந்தமான கவர்ஸ் கூட்டுறவு சேவைகள் நிறுவனத்தின் ஊடாக பரிமாற்றியமைக்காக, கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று அவருக்கு இன்டர்போல் ஊடாக பிடியாணை பிறப்பித்தது.
இந்த வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து குறித்த நபர் நீதிமன்றில் முன்னிலையாகாமல், நாட்டில் இருந்து வெளியேறி இருப்பதாக சட்ட மா அதிபர் திணைக்களம் சுட்டிக்காட்டிய நிலையில் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
அவர் குறித்த நிறுவனத்தின் பணிப்பாளராக செயற்பட்டு வந்துள்ளார்.
Post a Comment
Post a Comment