காஞ்சிகுடாவில் யானை தாக்கி,ஒருவர் உயிரிழப்பு




அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேசத்தில் காஞ்சிகுடா குளத்தடியில் யானை தாக்கி, குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். 

திருக்கோவில், விநாயகபுரம், பாடசாலை வீதியில் வசிக்கும் 4 பிள்ளைகளின் தந்தையான கிருஸ்ணபிள்ளை சதாசிவம் (வயது 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இன்று புதன்கிழமை காலை குறித்த இடத்தில் வேலைக்காச் சென்றபோதே இவரை யானை தாக்கியுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.