களுவாஞ்சிகுடியில் பாழடைந்த கிணற்றில் இருந்து சடலம் கண்டெடுப்பு




மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்று வெள்ளிக்கிழமை மாலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

களுவாஞ்சிகுடி - எருவில் பெற்றோல் நிரப்பு நிலையத்திற்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள காணியொன்றில் உள்ள கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. 

இது தொடர்பில் பிரதேசத்தில் இருந்தவர்களினால் பொலிஸ் அவசர நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் குறித்த பகுதியில் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றர். 

பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.