காலஞ் செய்த கோலமிது,குற்றத்தை யார் மேல் சொல்லுவது?




மியான்மரில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக வங்கதேசத்துக்கு தப்பிச் செல்ல முயன்ற ரோஹிஞ்சா முஸ்லீம்களில் குறைந்தபட்சம் 12 பேர், வங்கதேசம் அருகே படகு கவிழ்ந்து இறந்ததாக அதிகாரிகள் தெரிவுத்துள்ளனர்.
ஞாயிறன்று நஃப் நதியில் நிகழ்ந்த இந்த துயரச் சம்பவத்தையடுத்து பல ரோஹிஞ்சாக்கள் காணாமல் போயுள்ளனர். அவர்கள் பயணித்த அந்தக் படகில் குழந்தைகள் உட்பட நூறு பேராவது இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
தற்போது மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மியான்மரிலுள்ள ரக்கைன் மாநிலத்தில் ராணுவ நடவடிக்கைகளுக்கு பிறகு அருகிலுள்ள வங்கதேசத்துக்கு தப்பிச் செல்ல முயன்ற ரோஹிஞ்சாக்களில் பலர் ஏற்கனவே இறந்துள்ளனர்.
ஞாயிறன்று கவிழ்ந்த படகில் எத்தனை பேர் பயணித்தனர் என்ற சரியான விவரம் இன்னமும் தெரியவில்லை.
வங்கதேச எல்லையில் உள்ள அதிகாரிகள் நாற்பது முதல் நூறு பேர் வரை அதில் பயணித்திருக்கலாம் என வெவ்வேறு மதிப்பீடுகளை தந்துள்ளனர்.
இதுவரை பத்து குழந்தைகள், ஒரு பெண், ஒரு ஆண் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரோஹிஞ்சா அகதிகள் வங்கதேசம் தப்பிச்செல்லும்போது படகு விபத்துகள் ஏற்பட்டு இறப்பதில் ஞாயிறன்று நடந்தது சமீபத்திய நிகழ்வாகும்.
ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் சுமார் 60 ரோஹிஞ்சாக்கள் இதே போன்ற சம்பவங்களால் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது .
மியான்மரில் இருந்து நிலப்பகுதி வழியாக வங்கதேச எல்லையை சிலர் அடைந்துவரும் நிலையில், மற்றவர்கள் கடலில் சிறு மீன் பிடி படகு வழியாக தப்பிக்க முயற்சித்துள்ளனர்.
மியான்மரில் இருந்து நஃப் நதி வழியாக படகு மூலம் வங்கதேச எல்லையை அடையும் ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகளுக்கு உதவும் ஒரு வங்கதேசத்தவர்.படத்தின் காப்புரிமைAFP
Image captionமுதியவர்கள் குழந்தைகள் உள்பட வங்கதேசத்துக்கு தப்பிச் செல்லும் ரோஹிஞ்சாக்கள்
" நீச்சல் தெரியாதவர்களாக இருப்பினும், அளவுக்கு அதிகமான கூட்டம் நிறைந்த படகு என்றாலும் கூட அதன் மூலமாக தப்பித்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் பல மக்கள் காத்திருக்கின்றனர். அவர்கள் வங்கதேசத்தைச் சென்றடைவதற்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்திருக்கின்றனர் " என்கிறார் குழந்தைகள் காப்பாற்றும் உதவி நிறுவனம் ஒன்றின் செய்தி தொடர்பாளரான இவான் ஷுர்மான்.
"ரோஹிஞ்சா முகாம்களில் நடந்து செல்லும்போது ஒரு விஷயம் உறுதியாக புலப்படுகிறது. அது, குழந்தைகள் அதிர்ச்சியுடனும் துயரத்துடனும் இருக்கிறார்கள். அவர்கள் உணர்வுப்பூர்வமாக போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே" என பிபிசி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் இவான் ஷுர்மான்.
பரந்து விரிந்த ரோஹிஞ்சா முகாம்: ஆளில்லா விமானம் எடுத்த திகைக்கவைக்கும் படம்
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரோஹிஞ்சா கிளர்ச்சியாளர்கள் அங்குள்ள பாதுகாப்பு நிலையங்களை தாக்கினர். அதற்கு ராணுவம் பதிலடி கொடுத்தது.
அப்போதிலிருந்து மியான்மரில் குடியுரிமை மறுக்கப்பட்டு சிறுபான்மை இனமான ரோஹிஞ்சா முஸ்லிம்களில் அரை மில்லியனுக்கும் மேலானவர்கள் வங்கதேசத்திற்கு தப்பிச் சென்றுள்ளனர்.
மியானமர் ராணுவம் இனச் சுத்திகரிப்பு மற்றும் இனப்படுகொலைகளில் ஈடுபடுவதாக பரவலாக குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில் அவற்றை மறுத்துள்ளது ராணுவம்.
அவர்கள் இலக்கு வைத்தது ரோஹிஞ்சா கிளர்ச்சியாளர்களுக்கு மட்டும்தான் என ராணுவம் கூறியுள்ளது.