எப்பொழுது எங்கள் சமூகம் சிறுவர் இல்லங்கள் அற்ற சமூகமாக மாற்றம் பெறுகிறதோ அப்போதுதான் எங்கள் சிறுவர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டு ஆரோக்கியமான நல்ல சிறுவர்களுக்கான சூழலையும் ஏற்படுத்த முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்தா வித்தியாலயத்தில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாளாந்த ஊடகங்களில் சிறுவர்கள் தொடர்பில் வெளிவருகின்ற செய்திகள் சிறுவர்களுக்கு நாளாந்தம் இழைக்கப்படுகின்ற அநீதிகளை வெளிப்படுத்துகிறது.
அதுவும் எங்களுடைய பிரதேசங்களில் சிறுவர்களுக்கு எதிரான அநீதிகள் அதிகமாக இருக்கிறது.
இதற்கு எதிராக செயற்பாடுகளை முன்னெடுத்து சிறுவர்களுக்கான பாதுகாப்பான சூழலை உருவாக்கும் சிந்தனை எங்கள் சமூகத்தில் குறைவாகவே காணப்படுகிறது.
எங்களுடைய நாட்டில் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பல்வேறு சட்டங்கள் உண்டு.
இருந்தும் இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துபவர்களின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பு இன்மையால் சிறுவர்களுக்கு இந்தச் சட்டங்களால் பாதுகாப்பை பெறமுடியாதிருக்கிறது.
மேலும் இலங்கை அரசில் சிறுவர்களுக்கு என பல அமைச்சர்கள் உள்ளனர் அமைச்சர் இராஜாங்க அமைச்சர் பிரதி அமைச்சர் என உள்ளனர், பல உத்தியோகத்தர்கள் உள்ளனர் இருந்தும் என்ன எமது சிறுவர்களின் பாதுகாப்பு குறைவாகவே உள்ளது.
இதற்கு காரணம் சிறுவர்களை பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனையும் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பும் குறைந்துகொண்டு செல்வதே என நான் எண்ணுகிறேன்.
மேலும் எங்களுடை சமூக கட்டமைப்பு எங்கள் சிறுவர்கள் மீது பிரயோகிக்கப்படுகின்ற அநீதிகளை வெளியில் கொண்டுசெல்ல தடையாக இருக்கிறது. இதனால் பெரும்பாலான சிறுவர் துஸ்பிரயோகங்கள் வெளியில் தெரியாமலே மறைக்கப்படுகிறது. இந்த நிலைமைகள் கூட சிறார்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதற்கு காரணமாக இருக்கிறது.
எனவே சிறுவர்கள் தொடர்பில் பெற்றோர்கள். பாடசாலைகள் அதிகாரிகள், சமூகம் அரசியல்வாதிகள் என எல்லோரும் அர்ப்பணமாக உழைப்பை மேற்கொண்டால் சிறுவர்களுக்கான உத்தரவாதமுள்ள பாதுகாப்பான சூழலை உருவாக்கலாம் என நான் எண்ணுகிறேன்.
சில மேற்குலக நாடுகளில் சிறுவர்கள் தொடர்பில் அதிக அக்கறையோடு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதனை பர்ரத்திருக்கிறோம், சிறுவன் ஒருவனுக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டால் அந்த சமூகமே ஒன்றிணைந்து நீதியை பெற்றுக்கொடுக்கின்ற நிலைமை காணப்படுகிறது.
இது எங்களுடைய நாட்டில் மிகவும் குறைவு. ஆனால் அண்மையில் வித்தியாவின் கொலை வழக்கில் நீதி கிடைத்திருக்கிறது. ஆனால் பல விடயங்களுக்கு நீதி இல்லை. வித்தியா தொடர்பில் சமூகத்திற்கு இருந்து விழிப்புணர்வே நீதி கிடைக்க காரணமாக இருந்திருக்கிறது.
இவ்வாறே ஒவ்வொரு விடயத்திலும் சமூகத்திற்கு விழிப்புணர்வு அவசியம் அப்போதே சிறுவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்று குறிப்பிட்டார்.

Post a Comment
Post a Comment