வவுனியாவில் தீக்கிரையானது,பாடசாலை கட்டிடம்






வவுனியா, சாஸ்த்திரிகூலான்குளம், பாரதிதாசன் வித்தியாலயத்தில் கட்டிடமொன்றில் நேற்று (09) மாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. 

வவுனியா - ஈச்சன்குளம் பொலிஸார் இந்த தகவலை வௌியிட்டுள்ளனர். 

பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வுகள் இன்று (9) இடம்பெறவிருந்த நிலையில் நேற்று மாலை வகுப்பு இடம்பெற்ற தற்காலிக கட்டிடம் தீக்கிரையானது. 

தீப்பரவல் காரணமாக கட்டிடத்தில் இருந்த சில உடைமைகள் சேதமடைந்துள்ளன. 

சிலரின் தவறான செயற்பாடுகளால் தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர். 

தீப்பரவல் காரணமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும், பிரதேசவாசிகளின் ஒத்துழைப்புடன் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.