அரச அதிகாரிகள் ஐக்கியத்தையும், சம பங்கான அபிவிருத்திகளையும் முன்னேடுக்க உதவவேண்டும்




நாட்டின் வலுவாக ஐக்கியத்தை சம பங்கான அபிவிருத்திகளை முன்னேடுக்க அரச நிர்வாகத் துறை சார்ந்த அதிகாரிகள் எதிர்காலத்தில் முன்வர வேண்டும் என முன்னாள் ஐனாதிபதியும் நல்லிணக்க குழுவின் தலைவியுமான சந்திக்கா பண்டாரநாயக்கா குமாரணதுங்க தெரிவித்தார். 

எமது நாட்டின் பொருளாதார ரீதியான மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும் என்ற பாரிய பொறுப்பு இருக்கின்றது. 

அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு நாட்டின் அன்னிய செலவினங்கள் 71 வீதமாக இருந்துள்ளது. 

தற்போது 05 வீதத்தினால் மாத்திரம் உயர் நிலையில் உள்ளது. 

எனவே, எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு வட மாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளுர் உற்பத்திகளிலான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும் என்பதுக்கு இணங்க நாங்கள் ஒருங்கிணைந்த புனரமைப்பினை செயற்படுத்தயுள்ளோம். 

வட மாகாணத்தில் அதற்காக நாம் புதிய நடைமுறையிலான செயற்றிட்டங்களை முன்னேடுக்க எதிர்பார்த்துள்ளோம். 

அதுவும் தொழில்சார் விடயங்கள், ஏற்றுமதிக்கான சந்தை வாய்ப்புக்கள், பொருளாதார ரீதியான கட்டமைப்புகள் போன்ற விடயங்களில் எதிர்காலத்தில் கவனம் செலுத்தயுள்ளதாக அவர் தெரிவித்தார். 

எமக்கான நாட்டின் பொருளாதாரத் தன்மையினை நாங்கள் முன்னேடுக்க வேண்டும் அந்த வகையில் புலம் பெயர்ந்த கட்டமைப்பினை வலுப்படுத்த வேண்டியது காலத்தின் அவசியமாகின்றது என்றும் அவர் தெரிவித்தார். 

நாட்டின் பொருளாதார ரீதியாக தன்னிறைவினை ஏற்படுத்தும் வகையில் பொருளாதார தன்னிறைவினை கொண்டுள்ள வடமாகாணத்தினை எற்படுத்தல் என்னும் கருப்பொருளில் அரச அதிகாரி களுடனான உயர் மட்டக்கலந்துறையாடல் இன்று யாழ் திருநெல்வேலியில் உள்ள தின்ன விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. 

குறித்த கலந்துறையாடலுக்கு முன்னாள் ஐனாதிபதியும் நல்லிணக்க குழுவின் தலைவியும் ஆன  சந்திரிக்கா பண்டாரநாயக்கா மற்றும் இலங்கை வங்கி மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமராசாமி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.