பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இம்முறை 5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவி ஒருவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாராட்டும் பரிசும் கிட்டியுள்ளது.
திக்கல ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த துலஞ்சலி மதுமாலி பிரேமரத்ன என்ற மாணவியே இந்தப் பெருமைக்குச் சொந்தக்காரராகும்.
இவர் கடந்த புலமைப் பரிசில் பரீட்சையில் 168 புள்ளிகளைப் பெற்றுள்ளார் என்பதோடு, அப் பாடசாலை வரலாற்றில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த முதல் மாணவியும் இவராவார்.
இந்தநிலையில், இன்று காலை தனது தாய் மற்றும் பாடசாலை அதிபருடன் அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.
இதன்போது, குறித்த மாணவியை பாராட்டிய ஜனாதிபதி, அவரது உயர்தரம் வரை மாதாந்தம் 3000 ரூபா உதவித் தொகையை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.
மேலும், அவருக்குத் தேவையான பாடசாலை உபகரணங்கள் மற்றும் பரிசுப் பொருட்களையும் ஜனாதிபதி வழங்கி வைத்துள்ளார்.
அத்துடன், அம் மாணவிக்கு புதிய வீடொன்றை நிர்மாணித்து வழங்குவதாக, ஜனாதிபதியிடம் அமைச்சர் சஜித் பிரேமதாஸ உறுதியளித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Post a Comment
Post a Comment