தெற்காசிய சார்க் வலய சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் 8 ஆவது மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மாநாடு நடைபெறவுள்ளது.
தெற்காசிய வலயத்தில் வாழும் மக்களின் நட்புறவினை மேம்படுத்தல் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான தொடர்பினை வலுப்படுத்துவதற்காக கடந்த 1992 ஆம் ஆண்டு இந்த சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
சங்கத்தின் மாநாட்டிற்கு இணையாக தெற்காசிய நாடுகளின் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் கூட்டமும் இன்று நடைபெறவுள்ளது.
Post a Comment
Post a Comment