உதவிச் சட்டவுரைஞர்கள் 30 பேர் நியமிக்கப்படுவர்




“சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு, உதவிச் சட்டவுரைஞர்கள்  30 பேரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று நீதியமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன தெரிவித்துள்ளார்.  
“மேல் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்ற வழக்குகளை, மிகவிரைவாக, நிறைவுக்குக் கொண்டுவரும் நோக்கி​லேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  
“மேல் நீதிமன்றங்களில், தற்போது 100க்கும் மேற்பட்ட வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. அந்த வழக்குகளை மிகவிரைவாக நிறைவுக்குக் கொண்டுவரும் நோக்கிலேயே இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக”, அவர் மேலும் தெரிவித்தார். 
“அந்த வழக்குகளை நிறைவுக்கு கொண்டுவருவதற்காக, ஒவ்வொரு மேல் நீதிமன்றங்களுக்கும், சட்டவுரைஞர்கள் இருவரை நியமிப்பதற்கு, நடவடிக்கை எடுத்துள்ளது” என, அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  
“அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்ததன் பின்னர், அவர்களை இணைத்துகொள்வதற்கு, நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.  
“அதற்கு, நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு, பரிந்துரைகளை மேற்கொண்டுள்ளது” என்றும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.