இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை எதிர்வரும் 2037 ஆம் ஆண்டளவில் 22 வீதமாக அதிகரிக்கக்கூடும் என ஐக்கிய நாடுகள் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது 14 வீதமானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர் எனவும் இது 2037 ஆம் ஆண்டளவில் மேற்குறிப்பிட்டவாறு அதிகரிக்கக்கூடும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குடிசனமதிப்பீட்டுத் தகவலை அடிப்படையாக கொண்டே குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் முதியோரின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் மக்கள் நிதியம், இதனால் எதிர்கொள்ளவேண்டிய சவால்களுக்கு முகம்கொடுப்பது தொடர்பில் சமூக மற்றும் பொருளாதார நிறுவனங்களை பாதுகாக்கும் விடயத்தில் கொள்கை வகுப்பாளர்கள் கடினமாக உழைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment
Post a Comment