பிரிட்டிஷ் எழுத்தாளர் காஷோ இஷிகோரோ 2017-ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றுள்ளார்.
உலகத்துடன் நமக்கு உள்ள தொடர்புகள் குறித்த மாய உணர்வுகளின் கீழே உள்ள பாதாளத்தை இவரது உணர்ச்சி பூர்வமான நாவல்கள் விவரிக்கின்றன என்று சுவிடீஷ் அகாடெமி நாவலாசிரியரை பாராட்டியுள்ளது.
அவரது பிரபல நாவல்களான தி ரிமைன்ஸ் ஆஃப் தி டே மற்றும் நெவர் லெட் மி கோ (The Remains of the day and Never Let Me Go) ஆகியவை திரைப்படங்களாக எடுக்கப்பட்டு பெறும் வெற்றி பெற்றன.
அறுபத்தி இரண்டு வயதான இந்த நாவலாசிரியர், தமக்குக் கிடைத்த இந்த விருதினை `அளவுக்கதிகமான புகழ்ச்சி` என்று வர்ணித்துள்ளார்.
இது வரை அவர் எட்டு புத்தகங்களை எழுதி உள்ளார். அவை 40 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
பிபிசி அவரை தொடர்புகொண்ட போது, என்னை நோபல் பரிசு குழு அழைக்கவில்லை. இது புரளியா என்று தெரியவில்லை என்றார்.
இது ஒரு சிறப்பான மரியாதை என்று கூறியவர், பெரும் எழுத்தாளர்களின் அடிச்சுவட்டில் நான் இருக்கிறேன் அதனால் இந்த விருதினை பெரும் மரியாதை என்கிறேன் என்று கூறினார்
Post a Comment
Post a Comment