மீள்பரிசீலனை செய்ய 20ம் திகதிக்கு முன்னர்




புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்காக இம்மாதம் 20ம் திகதிக்கு முன்னர் பாடசாலை அதிபர் ஊடாக விண்ணப்பிக்கலாம் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

வௌியாகியுள்ள பெறுபேறுகளில் முரண்பாடுகள் இருப்பின் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய 1911 என்ற இலக்கத்திற்கோ அல்லது 011 2 784 208, 011 2 784 537, 011 3 188 350 என்ற இலக்கங்களுக்கோ அறிவிக்க முடியும் என்று அந்த திணைக்களம் கூறியுள்ளது. 

அதேவேளை கொழும்பு மற்றும் ஶ்ரீ ஜயவர்தனபுர வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்குறிய புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் பட்டியலை இன்றைய தினம் பரீட்சைகள் திணைக்களத்திற்கு வருகை தந்து பெற்றுக் கொள்ள முடியும் என்று அந்த திணைக்களம் கூறியுள்ளது. 

இதுதவிர ஏனைய பாடசாலைகளுக்குறிய பெறுபேறுகளின் பட்டியல் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.