வடக்கு மாகாணத்தில் போரின் காரணமாக ஏற்பட்ட காயங்களின் அடையாளங்களைப் போக்கும் வகையிலான பிளாஸ்ரிக் சர்ஜரி சிகிச்சை, நவம்பர் மாதத்தில் 100 பேருக்கு மேற்கொள்ளவுள்ளதாக கலாநிதி அமுதா கோபாலன் தெரிவித்தார்.
கொட்டாஞ்சேணை 306 B1 இலக்க மாவட்ட லயன்ஸ் கிளப் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள குறித்த சத்திர சிகிச்சை தொடர்பில் நேற்று யாழ்பாடி விடுதியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் கலாநிதி அமுதா கோபாலன் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,
வடக்கு மாகாணத்தில் போரின் காரணமாகவும், விபத்துக்கள், தீக்காயங்கள் காரணமாகவும் ஏற்பட்ட காயங்களின் அடையாளங்களைப் போக்கும் வகையில் பிளாஸ்ரிக் சர்ஜரி சத்திர சிகிச்சை கடந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டிருந்தோம்.
அப்போது 40 பேருக்கு இந்த மாற்று சிகிச்சை இடம்பெற்றது. அவ்வாறு மேற்கொண்ட சிகிச்சையில் பயன்பெற்றோர் தற்போது அதன் நன்மையை அனுபவித்து வருகின்றனர்.
இதன் அடிப்படையில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 12ம் திகதி முதல் 6 தினங்கள் குறித்த சிகிச்சை தெல்லிப்பளை வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது. இதன்போது சுமார் 100 பேருக்கு இச் சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்காக அமெரிக்காவில் இருந்து 6 வைத்திய நிபுணர்களும் 18 உதவியாளர்களுமாக 24 பேர் கொண்ட அணி இங்கு வருகை தரவுள்ளது.
எனவே இவ்வாறான பிளாஸ்ரிக் சிகிச்சை தேவைப்படுபவர்கள் தெல்லிப்பளை வைத்தியசாலையுடன் தொடர்பு கொண்டு தமது பதிவுகளை மேற்கொள்வதன் மூலம் இந்த சேவையினை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும். என்றார்.

Post a Comment
Post a Comment