1ம், 2ம் தர மாணவர்களுக்கு ஆங்கில புத்தகங்கள்




அடுத்த வருடம் முதல் முதலாம் மற்றும் இரண்டாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்காக, புதிய ஆங்கிலப் பாடப் புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக, கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

ஆரம்பப் பிரிவு வகுப்புகளில் இருந்தே ஆங்கிலப் பாடத்தை மாணவர்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக, அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.