வெல்லாவெளி;யானை தாக்கி ஒருவர் பலி




வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யானை தாக்கி ஒருவர் இன்று (01) உயிரிழந்துள்ளார்.
வெல்லாவெளி பகுதியை சேர்ந்த தம்பிராசா திருச்செல்வம் வயது(62)என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் ,சம்பவம் தொடர்பில் வெல்லாவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.