புனித ஹஜ் பெருநாள் தொழுகை யாழில் இரு வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்றது.
******************************
பாறுக் ஷிஹான்
******************************
பாறுக் ஷிஹான்
ஈதுல் அல்ஹா புனித ஹஜ் பெருநாள் தொழுகை யாழில் இரு வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்றது.
யாழ்ப்பாணம் ஜின்னா மைதானத்தில் முஸ்லிம் வட்டார மக்களுக்கான பெருநாள் தொழுகை ஏற்பாடுகள் மௌலவி அப்துல் அஸீஸ் (காசிமி) தலைமையில் நடைபெற்றது.
அத்துடன் யாழ்ப்பாணம் பூங்காவிற்கு முன்னால் இருக்கும் யாழ் மாநகர மைதானத்தில் தௌஹீத் ஜமாத் அமைப்பின் பெருநாள் தொழுகை அஷ்-ஷெய்க் பைசல் (மதனி) தலைமையில் நடைபெற்றது.
இப்பெருநாள் தினமானது இறை தூதர்களில் ஒருவரான இப்றாஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக இஸ்லாமிய நாட்காட்டியின் பிரகாரம் துல்ஹஜ் மாதம் பிறை பத்தில் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.
வசதிபடைத்த முஸ்லிம்கள்இ இஸ்லாத்தின் ஐந்து முக்கிய கடமைகளில் இறுதிக் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக புனித மக்கா சென்று மார்க்கக் கடமைகளில் ஈடுபடுவார்கள்.
உலகின் சகல பாகங்களில் இருந்தும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக புனித மக்கா மாநகரில் மொழி மற்றும் பிரதேச வேறுபாடுகளை கடந்து இலட்சக் கணக்ககானவர்கள் ஒன்றுகூடி ஹஜ் வழிபாடுகளில் ஈடுபடுவது இந்த தினத்தின் விசேட அம்சமாகும்.
Post a Comment
Post a Comment