(க.கிஷாந்தன்)
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டக்கலை மேபீல்ட் தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலையில் 02.09.2017 அன்று விடியற்காலை 3 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீயினால் இத் தொழிற்சாலையில் ஒரு சில பகுதி சேதமாகியுள்ளது.
குறித்த தொழிற்சாலையில் பொறுத்தப்பட்டுள்ள விரகு அடுப்பின் புகை வெளியேரும் பகுதியில் ஏற்பட்ட தீ கசிவினால் தொழிற்சாலையின் இரண்டாவது மாடியின் பகுதியளவும், ஏனைய சில பகுதிகளிலும் தீ பரவியுள்ளது.
அத்தோடு தீ ஏற்பட்டதன் காரணமாக தேயிலை தூளும், தேயிலை கொழுந்துகளும் தீக்கிரையாகியுள்ளது.
இதனையடுத்து அத் தோட்ட பொதுமக்களினதும், அட்டன் டிக்கோயா நகர சபை தீயணைப்பு பிரிவினரும், திம்புள்ள பத்தனை பொலிஸாரினதும் முயற்சியினால் தீ கட்டுபாபாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனால் பாதிப்புக்குள்ளாக கூடிய தொழிற்சாலையின் பெறுமளவிலான சொத்துக்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் ஆராயப்பட்டு வருவதாக மேபீல்ட் திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment
Post a Comment