அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் இல்லாததே அணியின் தோல்விக்கு காரணம் என லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று இந்தியாவுடன் இடம்பெற்ற போட்டியை தொடர்ந்து இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போது மாலிங்க இதனை தெரிவித்திருந்தார்.
சிரேஷ்ட வீரர்கள் அணியில் இருந்திருந்தால் அனுபவமற்ற வீரர்களுடன் சர்வதேச போட்டிகளில் இவ்வாறான தோல்விகளை சந்திக்க நேரிட்டிருக்காது என அவர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.
சாமர சில்வா , திலின கன்டம்பி , ஜெஹான் முபாரக் , மலிங்க பண்டார் , குசல் லொகுஆரச்சி , கௌசல்ய வீரரத்ன , தரங்க பரணவிதாரன போன்று மலிந்த வர்ணபுர ஆகிய வீரர்கள் அணியில் இருக்கும் அனுபவம் வாய்ந்த வீரர்களாகும்.
இவர்கள் சிலவருடங்காக சர்வதேச போட்டிகளில் விளையாடியிருந்த நிலையில் , நீக்கப்பட்டமை காரணமாக அந்த அனுபவங்களை அணிக்கு பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளது.
2004ம் ஆண்டு தான் அணியில் இடம்பெறும் போது இலங்கை அணியில் 8 அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருந்தனர்.
எனினும், சமீப காலத்தில் அந்த நிலை மாறியுள்ளது.
உலகின் எந்தவொரு அணியிலும் புதிய வீரர்களுடன் சிரேஷ்ட வீரர்கள் இருக்கும் போது அணியை வெற்றியை நோக்கி இட்டுச் செல்ல முடியும் என லசித் மாலிங்க குறிப்பிட்டிருந்தார்.
Post a Comment
Post a Comment