கிளிநொச்சியில், மின்னல் தாக்கி மனைவி பலி




கிளிநொச்சியில் நீண்ட நாட்களுக்கு பின் பெய்த கன மழையின் போது ஏற்பட்ட மின்னலில் மனைவி பலியானதுடன் கணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று சனிக்கிழமை பிற்பகல் மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் கன மழை பெய்துள்ளது. 
இதன் போது ஏற்பட்ட மின்னல் தாக்கத்தில் பூநகரி இரணைமாதா நகர் கிராமத்தைச் சேர்ந்த ரூபன் லட்டிசியா பிரதீபா (வயது 40) என்பவர் பலியானதுடன், அவரின் கணவா் பீற்றர் ரூபன் (வயது 42) என்பவர் கடுமையான பாதிப்புக்குள்ளாகி முழங்காவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
பிற்பகல் வேளை மழை பெய்து கொண்டிருந்த போது இருவரும் வீட்டின் கிணற்றில் குளித்துக்கொண்டிருந்த போது இரண்டு முப்பது மணியளவில் ஏற்பட்ட மின்னனல் தாக்கத்திலேயே இச் சம்பவம் ஏற்பட்டுள்ளது. 
பலியானவர் ஆறு பிள்ளைகளின் தாய் ஆவார். தமது பூர்வீக நிலமான இரணைத்தீவுக்கு செல்ல வேண்டும் என போராட்டத்தில் ஈடுப்பட்டு வருபவர்களில் இவா்களும் காணப்படுகின்றனர்