உள்நாட்டில் மிகப் பலத்த தோல்வீ




இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 168 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியின் நாணயசுழற்சியில் வென்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. 

அதன்படி, களமிறங்கிய இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களுள் ஒருவரான தவான் 4 ஓட்டங்களை மட்டுமே பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். 

பின்னர் மறுமுனையில் இருந்த ரோகித் சர்மாவுடன் கரம் கோர்த்த அணித் தலைவர் விராட் கோலி தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

இதற்கமைய, ரோகித் சர்மா 104 ஓட்டங்களையும் கோலி 131 ஓட்டங்களையும் விளாசியதோடு, ஆட்டமிழக்காது இறுதி வரை களத்தில் இருந்த பாண்டே 50 ஓட்டங்களையும் மஹேந்திர சிங் தோனி 49 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். 

அதன்படி இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 375 ஓட்டங்களைக் குவித்து, 376 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற கடினமான இலக்கை இலங்கை அணிக்கு நிர்ணயித்தது. 

அதன்படி இரண்டாவதாக களமிறங்கிய இலங்கை அணி 42.4 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 207 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. 

அதிக பட்சமாக மெத்திவ்ஸ் 70 ஓட்டங்களைப் பெற்றார். 

முன்னதாக இடம்பெற்ற மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி 3-0 என தொடரை வசப்படுத்தியுள்ள நிலையில்  நான்காவது போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.