20 மைக்ரோனிற்கும் குறைவான பொலிதீன் பொருட்களுக்குத் தடை




பொலித்தீன்  பொருட்களின் பயன்பாடு மற்றும் அதன் உற்பத்திகள் என்பவற்றிற்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று(01) வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய 20 மைக்ரோனிற்கும் குறைவான பொலித்ததீன் பொருள் பாவனை மற்றும் விற்பனை என்பவற்றிற்று தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் அதிக தடிப்புடைய பொலித்தீன்களை உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல், தடிப்புடைய பொலித்தீன் பைகளை  இலவசமாக விநியோகித்தல், மற்றும் காட்சிப்படுத்துதல் என்பனவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 இதேவேளை மாற்று உற்பத்திகள் இது வரை அறிமுகப்படுத்தப்படாமையின் காரணமாக சில நோக்கங்களுக்காக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் எழுத்து மூல அனுமதியுடன் பயன்படுத்த முடியும் என்றும் அந்த வர்த்தமானி அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.
இன்று தொடக்கம் பொலித்தீன் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஜனவரி மாதம் வரை சட்ட நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.