விஜயதாஸவிற்காக கூட்டு எதிர்க்கட்சி முன்நிற்காது




கூட்டு எதிர்க்கட்சி ஒருபோது பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம கூறினார். 

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். 

கூட்டு எதிர்க்கட்சி ஒருபோதும் விஜயதாஸ ராஜபக்‌ஷவிற்காக முன்நிற்காது என்றும் அவர் கூறினார். 

ஐக்கிய தேசிய கட்சியில் நியமனம் வழங்குவது மற்றும் நீக்குவது சம்பந்தமாக தீர்மானம் எடுப்பது அந்தக் கட்சியின் உரிமை என்றும் எனினும் விஜயதாஸ ராஜபக்‌ஷ பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காமையின் காரணமாக அவரை பதவி நீக்க நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் கூறினார்.