(க.கிஷாந்தன்)
நாவலப்பிட்டி கலபொட தோட்டத்தில் 23.08.2017 அன்று மதியம் 150ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தோட்டத்தின் பழைய தொழிற்சாலைக்கு முன்பாக பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தோட்ட அதிகாரி ஒருவர் தொழிலாளி ஒருவரை தாக்கியதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த தோட்ட அதிகாரி குடியிருக்கும் விடுதியில் அப்பகுதியில் இருந்து வந்த கால்நடை ஒன்று அதிகாரியின் விடுதியின் வளாகத்தில் இருந்த புற்களை உட்கொள்ளும் போது, தோட்ட அதிகாரி அதனை கண்டு மேற்படி கால்நடையை தனது விடுதிக்கு அருகில் கட்டி வைக்குமாறு குறித்த தொழிலாளிடம் பணித்துள்ளார்.
சம்மந்தப்பட்ட தொழிலாளி கால்நடையை விடுதிக்கு முன்னால் கட்டி வைத்திருந்த போது, கால்நடையின் உரிமையாளர் தோட்ட அதிகாரிக்கோ, குறித்த தொழிலாளிக்கோ அறிவிக்காமல் கால்நடையை கொண்டு சென்றுள்ளார்.
இதனை பொருத்துக்கொள்ள முடியாத தோட்ட அதிகாரி தன்னை தாக்கியதாக குறித்த தொழிலாளி நாவலப்பிட்டி பொலிஸாரிடம் முறைபாடு செய்துள்ளதுடன், அவர் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
தோட்ட அதிகாரியின் இந்த செயல்பாட்டை கண்டித்தும், இவரை பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக கைது செய்யுமாறும் கோரியே சுமார் ஒரு மணித்தியாலம் இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
Post a Comment
Post a Comment