வெலிகம, மிரிஸ்ஸ கடற்பகுதியில் நீராடிக் கொண்டிருந்த வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மற்றொரு நபர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடலில் நீராடிக் கொண்டிருந்த இருவர் கடல் அலைகளுக்கு அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஒருவர் காப்பாற்றப்பட்டு மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
24 வயதுடைய இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த வௌிநாட்டுப் பிரஜை ஒருவரே உயிரிழந்துள்ளார்.
காணாமல் போயுள்ள நபர் காலி, ஹப்புகல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் என்பதுடன், பொலிஸார், கடற்படையினர் மற்றும் மிரிஸ்ஸ கடற்பாதுகாப்பு அதிகாரிகள் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment
Post a Comment