(க.கிஷாந்தன்)
அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் பகுதியில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின்போது சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்டதென சந்தேகிக்கப்படும் ஒருதொகை பீடியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பீடிகளை கண்டி மாவனெல்ல பகுதியிலிருந்து கொண்டு வந்து அட்டன் நகர பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்யும் பொழுது, அட்டன் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலய பகுதியில் அட்டன் பிரதான வீதியில் வைத்து கிடைத்த இரகசிய தகவலையடுத்து அட்டன் பொலிஸ் நிலைய உதவிபொலிஸ் பரிசோதகர் எம்.பிரதீப் தலைமையில் சாஜன் மகேஷ்வரன், ரதீஷன் ஆகியோர் கொண்ட குழு இவ்வாறு 23.08.2017 அன்று இரவு 7 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது மீட்கப்பட்ட பீடிகளில் இலட்சினை பொறிக்கப்படாத, சுகாதார எச்சரிக்கை விளம்பரம் மற்றும் லேபல்கள் ஒட்டப்படாத நிலையில் 143 பன்டல்களில் 1430 பீடிகள் கைப்பற்றப்பட்டதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள அதேவேளை, சந்தேக நபருக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்துள் ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அட்டன் மஹிந்தமாவத்த பகுதியை சேர்ந்தவர் என அட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்ததோடு, மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment
Post a Comment