இலங்கைக்கு நேராக இன்று முதல் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை சூரியன் உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதற்கமைய இன்று மதியம் 12.12 மணியளவில் சங்கானை, முளாய், மல்லாகம் மற்றும் வரணி ஆகிய பகுதிக்கு மிக அருகில் சூரியன் உச்சம் கொடுக்கும். இதனால் இப் பிரதேசங்களில் வழமையை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும்.
இதேவேளை நாட்டின் ஊடாக மணிக்கு 40 தொடக்கம் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
விசேடமாக ஊவா, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணத்திலும், அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் கடும் காற்று வீடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Post a Comment
Post a Comment