நீதி, பௌத்த விவகார அமைச்சர்கள்




நீதி மற்றும் புத்த சாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்காக வௌிநாட்டு வேலைவாயப்பு அமைச்சர் தலதா அத்துகோரல மற்றும் நிலையான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அதன்படி நீதியமைச்சராக வௌிநாட்டு வேலைவாயப்பு அமைச்சர் தலதா அத்துகோரலவும், புத்தசாசன அமைச்சராக நிலையான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். 

சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்