(அஷ்ரப் ஏ சமத்)
கிழக்கு மாகாண முதலமைச்சா் நசீர் அஹமட்டின் முயற்சியின் பேரில் சுற்றுலாத்துறை மற்றும் கிரிஸ்த்துவ விவகார அமைச்சா் ஜோன் அமரதுங்க மட்டக்களப்பு மாடவ்ட்டத்தில் இரண்டு சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு மையத்தினை அடில்கல் நாட்டி நிர்மாணப்பணிகளை ஆரம்பித்து வைத்தாா். ஏறாவுர் வாவிக்கருகில் 100 மில்லியன் ருபா செலவிலும் ஆரையம்பதி பிரதேசத்திலும் 100 மில்லியன் செலவில் இவ் திட்டம் ஆரம்பித்து வைக்க்பட்டது.
இதன் மூலம் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு பிரதேசத்தில் வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உணவகம், தங்குமிடம், மற்றும் விற்பனை மையம், கிழக்கு சுற்றுலா சம்பந்தமான தகவல்கள் இந் நிலையம் இக் கட்டடித்தில் அடங்கும். . இதனை கிழக்கு மாகாண முதலமைச்சா் நசீர் அஹமட்டின் வேண்டுகோலிக்கிணங்க அமைச்சா் ஜோன் அமரதுங்க 200 மில்லியன் ருபாவை ஒதுக்கீடு செய்திருந்தாா். இவ் அடிக்கல் நாடும் வைபவத்தில் அமைச்சா்களான ரவுப் ஹக்கீம், பிரதியமைச்சா் பைசால் காசீம், மாகாண அமைச்சா்கள் நசீர், தண்டயாதபாணி மற்றும் கிழக்கு சுற்றுலா தகவல் பணியகத்தின் உப தலைவா் சர்ஜூன் அபுபக்கரும் கலந்து கொண்டனா்.
Post a Comment
Post a Comment