இராணுவ வீரர்கள் மீது வாள்வெட்டு




கிளிநொச்சி, ஊற்றுப்புலத்தைச் சேர்ந்த தமிழ் இராணுவ வீரர்கள் இருவர் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி, கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர் என,பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், இருவரின் இடது கைகளில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை எனவும் தெரிவித்த பொலிஸார்,  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.