மண்டைத்தீவில் மரணித்தோரின் இறுதிக்கிரியைகள் இன்று




யாழ்ப்பாணம் – மண்டைத்தீவில் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்த 6 மாணவர்களில் இருவரின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெற்றன.
படகு கவிழ்ந்ததில் உயிரிழந்த தேவகுமார் தனுரதனின் பூதவுடல் இன்று யாழ். கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இதேவேளை, உரும்பிராய் தெற்கைச் சேர்ந்த ஜெயசாந்தி டினேசின் பூதவுடல் இன்று காலை உரும்பிராய் வேம்பம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டைத்தீவு பகுதியில் படகு கவிழ்ந்ததில் 6 மாணவர்கள் கடந்த திங்கட்கிழமை (28) உயிரிழந்தனர்.
உயிரிழந்த மேலும் மூன்று மாணவர்களின் இறுதிக்கிரியைகள் நேற்று இடம்பெற்றன.