#இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான்
இலங்கையில் புதிய நீதி அமைச்சராக தலதா அத்துகொரள இன்று, வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவின் முன்னிலையில் 2017/08/25ல் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
1963/5/30இல் ரத்னபுரியில் பிறந்தவரான, 54 வயதான தலதா அத்துக்கோரள இலங்கையில் முதலாவது பெண் நீதி அமைச்சராவார். அவர் தற்போது வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.
சட்டத்தரணியான இவர் 2004-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு முதல் தடவையாக தெரிவானார்.முன்னாள் அமைச்சர் அமரர் காமினி அதுகொரளவின் சகோதரி.
#ceylon24 இணையம் தமது வாழ்த்துளைத் தெரிவிக்கின்றது
Post a Comment
Post a Comment