இலங்கை மற்றும் சுற்றுலா இந்தியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
நேற்று (27) கண்டி பல்லேகலவில் பகலிரவு ஆட்டமாக இடம்பெற்ற மிக முக்கியத்துவம் வாய்ந்த இப்போட்டியில், இந்திய அணி 44 ஓவர்கள் நிறைவில், வெற்றி பெறுவதற்கு 8 ஓட்டங்கள் தேவைப்பட்டிருந்த நிலையில் இலங்கை இரசிகர்களால் தண்ணீர் போத்தல்கள் வீசி குழப்பம் குழப்பம் விளைவிக்கப்பட்டதை அடுத்து ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.
அதன் பின்னர் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, போட்டி மீண்டும் ஆரம்பமானது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 217 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இலங்கை 217/9 (50)
லஹிரு திரிமான்ன 80
மிலிந்த சிறிவர்தன 29
லஹிரு திரிமான்ன 80
மிலிந்த சிறிவர்தன 29
பந்துவீச்சில் இந்திய அணி சார்பில்,
ஜஸ்பிரித் பும்ரா 5/27
கேதர் ஜாதவ் 1/12
ஜஸ்பிரித் பும்ரா 5/27
கேதர் ஜாதவ் 1/12
218 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 45.1 ஓவர்களில் 4 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி பெற்றது.
இந்தியா 218/4 (45.1)
ரோஹித் சர்மா 124*
மஹேந்திர சிங் தோனி 67*
ரோஹித் சர்மா 124*
மஹேந்திர சிங் தோனி 67*
போட்டியின் நாயகன்: ஜஸ்பிரித் பும்ரா (5/27)
அந்த வகையில் 5 போட்டிகளைக் கொண்ட இத்தொடரை இந்திய அணி 3 – 0 என கைப்பற்றியுள்ளது.
கடந்த 1997ஆம் இந்திய அணி இந்திய அணியுடனான ஒருநாள் தொடர் எதனையும் இலங்கை அணி கைப்பற்றவில்லை என்பதோடு, இந்திய அணி தொடர்ச்சியாக 8 தொடர்களை (2005-2017) கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அணி, தொடர்ச்சியாக 9 தொடர்களை மேற்கிந்திய தீவுகள் (1999-2017), சிம்பாப்வே (1996-2015) அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளதோடு அதற்கு அடுத்தபடியாக தென்னாபிரிக்க அணி சிம்பாப்வே அணிக்கு எதிராக (1995-2014) 8 தொடர்களை வெற்றி பெற்றுள்ளன.
இதேவேளை முக்கியத்துவம் வாய்ந்த இப்போட்டியில் தோல்வியடைந்த இலங்கை அணி, எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ண போட்டித் தொடருக்கு நேரடியாக தகுதி பெறுவதற்கான வாய்ப்பை உறுதி செய்ய இத்தொடரில் எஞ்சியிருக்கும் 2 போட்டிகளில் வெற்றி பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தொடரின் 4 ஆவது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.
இச்சுற்று தொடரில் ஏற்கெனவே இடம்பெற்ற டெஸ்ட் தொடரையும் 3 – 0 என இந்திய அணி கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment