வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிண்ணையடி பகுதியில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட மின்னல் தாக்கத்தால் அப்பகுதியிலுள்ள வீடுகளில் மின் உபகரணங்கள் சேதமடைந்துள்ளதாக, வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணையடி விஷ்ணு கோவில் வீதியிலுள்ள ஆறுமுகம் பாக்கியராசா என்பவரின் காணியிலுள்ள தென்னை மரத்தில் மின்னல் விழுந்து, மரம் எரிந்துள்ளதுடன், அவரது வீடு மற்றும் அயலிலுள்ள 5 வீடுகளில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டி, வானொலி, டெக், மின்விசிறி, மின்குமிழ் போன்ற மின்சார உபகரணங்கள் சேதமடைந்துள்ளன.
இச்சந்தர்ப்பத்தில் பொதுமக்கள் எவருக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் வாழைச்சேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Post a Comment
Post a Comment