வவுனியா வாகன விபத்தில் ஒருவர் பலி




வவுனியா - கல்குண்ணாமடுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து இன்று அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
அனுராதபுரத்திலிருந்து வவுனியா நோக்கி ஓடுகளை ஏற்றிச் சென்ற வாகனம் கல்குண்ணாமடுவ பகுதியில் எந்தவித சமிச்சை விளக்குகளுமின்றி தரித்து நின்றுள்ளது.
அதே பாதையில் வவுனியா நோக்கி வீட்டின் மேல் கூரை அலங்கரிப்பு பொருட்களை ஏற்றி சென்ற வாகனம் தரித்து நின்ற குறித்த வாகனத்தின் மீது மோதியுள்ளதுடன்,வாகனம் தூக்கி வீசப்பட்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் தரித்து நின்ற வாகனத்தில் பயணித்த வன்னிமுத்து கிருஸ்ணன் (வயது 48) என்பவர் உயிரிழந்ததுடன், மூவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.