இரண்டு மாத குழந்தையொன்று தீக்காயங்களுடன்




(க.கிஷாந்தன்)

பொகவந்தலாவ குயினா கீழ்ப்பிரிவில் இரண்டு மாத குழந்தையொன்று அடுப்பில் தவறி விழுந்ததாக பாரிய தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் 20.08.2017 அன்று ஞாயிற்றுகிழமை மாலை 06.15 மணியளவில் இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த குழந்தையின் தாய் வீட்டு வேலைகளில் ஈடுபட்டு கொண்டிருந்த போது குறித்த இரண்டு மாத குழந்தை அடுப்பில் தவறி விழுந்தாக வைத்தியசாலை வைத்தியரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி தாயாரின் தகவல்கள் வைத்தியருக்கு சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

பலத்த எறி காயங்களுக்குள்ளான இரண்டு மாத பெண் குழந்தையான அனுஷாகுமாரி பொகவந்தலாவ வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றபட்டு பின்னர் நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றபட்டுள்ளதாக வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவித்தன.

குறித்த தாய் மூன்று குழந்தைகளின் தாய்யெனவும், இவரின் கணவர் வெளியில் தொழில் நிமித்தம் சென்று உள்ளதாகவும் வீட்டில் இரண்டு மாத குழந்தையின் தாயும் எறிகாயங்களுக்குள்ளான குழந்தையும் மற்றும் இரண்டு வயது குழந்தையும் வீட்டில் இருந்த வேளையில் சமையலறையில் தொங்கவிடபட்டிருந்த தொட்டியின் அளவும் சமையல் அறையில் அமைக்கபட்டிருந்த அடுப்பும் சமத்தரையில் இருப்பதாகவும் தொங்கவிடபட்ட தொட்டிலில் தீ பற்றியிருந்தாகவும், இதன் முலமாகவே குழந்தைக்கு தீ காயங்கள் ஏற்பட்டிருக்கலாமென பொலிஸார் சம்ப இடத்திற்கு சென்று விசாரணைகள் மேற்கொண்டபோது தெரியவந்துள்ளது.

இதே வேலை குழந்தை உறங்கி கொண்டிருந்த அடியில் குப்பி விளக்கு ஒன்றும் சாய்ந்து கிடந்ததாகவும் தெரியவருகிறது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.