இலங்கைக்கு எதிராக நேற்று பல்லேகலயில் நடைபெற்ற 2 ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
இதன்படி இந்திய அணி தொடரில் 2–0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.
பல்லேகலயில் நடைபெற்ற வரும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 237 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி இரவு எட்டு மணிக்கு ஆரம்பமானது.
அப்போது இந்திய அணிக்கு டக்வெர்த் லூவிஸ் விதிப்படி 47 ஓவர்களில் 231 ஓட்டங்கள் பெற வேண்டும் என பணிக்கப்பட்டது.
நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி தலைவர் விராட் கோலி களத்தடுப்பகை தேர்வு செய்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 236 ஓட்டங்களைப் பெற்றது.
Post a Comment
Post a Comment