மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் புதன்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் களுதாவளை பகுதியில் மஞ்சல் கோட்டுக்கு அருகிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் வாகனம் ஒன்றை முந்திச்செல்ல முற்பட்டவேளை அந்த வாகனத்தில் மோதி கீழே வீழ்ந்தபோது எதிரே வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிளுக்கு மேலால் ஏறியுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த களுதாவளை முருகன் ஆலய வீதியை சேர்ந்த 24 வயதுடைய ம.இதயராஜ் என்ற இளைஞர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தனியார் பஸ் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், பஸ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்

Post a Comment
Post a Comment