காற்றுள்ளவரை கலைஞராய் வாழ்வாய்




உன் அரசியல்-
எனக்குப் பிடிக்காது ஏயெச்எம் அஸ்வரே!
ஆனால்-
கலைஞராக கவர்ந்தாய்
என்னை


வானொலியில்-
அன்று
அப்துல் ஜப்பாருடன்
கிரிக்கெற் வர்ணணை-
ஆமினா பேகத்துடன்-
நாடகங்கள்-
வீரகேசரியில்-
ஒரு பத்திரிகையாளன்
எனப் பல்துறை முகங்கள்
உன்னுள்ளே.

மும்மொழிப் புலமை-
ரணசிங்க பிரேமதாச முதல்
ரணில் வரைக் கவர்ந்தது-
அதனால்-
அடித்ததோ
தேசியப் பட்டியல்
அதிஸ்டம்.

ராஜாங்க அமைச்சராய்
அமர்ந்து,
கலைஞர்களை கௌரவித்தாய்.
பொன்னாடையும் பொற் கிழியும்-
வழங்கினாய்.

புத்தக வெளியீடுகளுக்குச்-
செல்லும் பிரதம அதிதிகள்-
சொந்தக் காசில்-
பிரதி வாங்காத வேளையில்-
நீயோ சொந்தப் பணத்தில்
வாங்கினாய்.

கொமிசன்கள்-
கொந்தராக்குகள்-
கொள்யைடிக்கும்-
அரசியல் வாதிகளில்-
நீயோ விதி விலக்கு

”நேயரின் பார்வையில்”
நுால் வெளியீட்டுக்கும்
வந்தாய்.
இல்லற பந்தத்தில்
இணைந்த வேளை
அக்கறையோடு-
அக்கரைப்பற்றுக்கும் வந்து வாழ்த்தினாய்.

ஒன்றா, இரண்டா
பேட்டிகள் உன்னுடன்-
வானொலி தொலைக்காட்சிகளில்.
ஏன் சக வர்ணணையாளராகவும்தான்.

இறுதி வரை
நாடாளுமன்றக் கதிரையில்-
இருப்பதற்கு-முயற்சித்தாய்.
உனக்கும் மேலே-
ஒருவன் உள்ளான் என்பதை
மறந்து விட்டாய் போலும்-
தோற்றே போனாய்-
ஆனால்-
தொலைந்து விடவில்லை.

கலைஞராய், வர்ணனையாளராய்
பத்தி எழுத்தாளனாய்
பாருலகு போற்றும் உன்னை-
காற்றுள்ளவரை.

இரு கரம் ஏந்துகின்றேன்
நீ  குணம்பெற!

(இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான்)