வினாப்பத்திரம் வெளியான சம்பவம் தொடர்பில் மாணவன் கைது




உயர்தர பரீட்சையின் இரசாயன வினாத்தாளிலுள்ள வினாக்கள் சிலவற்றை வெளியிட்ட சம்பவம் தொடர்பில் உயர் தர மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பரீட்சியின் போது குறித்த மாணவன் நவீன உபகரணம் ஒன்றின் மூலம் ஆசிரியர் ஒருவரிடம் விடை கோரியுள்ளதாகவும் அவ்வாறு ஆசிரியருக்கு அனுப்பிய கேள்விகளை குறித்த ஆசிரியர் அச்சிட்டு வெளியிட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மாணவனின் தந்தை வைத்தியர் ஒருவர் என்பதுடன் கேள்விகளுக்கு பதிலளிக்க குறித்த ஆசிரியருக்கு 10 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் இதற்கு முன்னர் மூவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.