சனத் ஜயசூரியவும் உறுப்பினர்களும் இராஜினாமா




இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் சனத் ஜயசூரியவும் குழுவின் உறுப்பினர்களும் தமது பொறுப்புக்களை இராஜினாமா செய்துள்ளனர்.
அவர்களின் இராஜினாமாக் கடிதங்கள் இன்று பிற்பகல் தமக்கு கிடைத்ததாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்
ரஞ்ஜித் மதுரசிங்க, அசங்க குருசிங்க, ரொமேஸ் களுவித்தரன , எரிக் உபசாந்த ஆகியோர் தெரிவிக்குழுவின் உறுப்பினர்களாக அங்கம் வகித்தமை குறிப்பிடத்தக்கது.
இவர்களது ஒன்றிணைந்த இராஜினமாக் கடிதங்களின் பிரகாரம் செப்டம்பர் 7 ஆம் திகதி முதல் அவர்களின் பதவிகள் முடிவுக்கு வருகின்றன.