''வாள்வெட்டுச் சம்பவங்களுக்காக நேரடியாகத் தலையிட்டேன்''




வடக்கில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாகவும் அதற்காக நேரடியாக தலையிட்டதாகவும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நேற்று (27) தெரிவித்துள்ளார்.
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 150 ஆவது வருட நிறைவை முன்னிட்டு பதுளையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பொலிஸ்மா அதிபர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
வடக்கில் அண்மைக்காலமாக சில அசம்பாவிதங்கள் இடம்பெற்றன. அடிக்கடி வாள்வெட்டுச் சம்பவங்களும் இடம்பெற்றன. இவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நான் நேரடியாக தலையிட்டேன். நான் யாழ்ப்பாணத்துக்குச் சென்று மக்களையும் மக்கள் பிரதிநிதிகளையும் சந்தித்தேன்.
அதன்பிறகு விசேட தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதன் பலனாக ஆவா குழு உள்ளிட்ட அனைத்துக் குழுவினரையும் எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்தது. குற்றமிழைத்தோர் அனைவரும் இன்று கைதாகியிருக்கின்றனர் என்றார்.