புதிய கணக்காய்வு சட்டமூலம் சமர்ப்பிக்கப்படாததால், தேசிய கணக்காய்வு செயலகம் மற்றும் தேசிய கணக்காய்வு சேவைகளை ஸ்தாபிக்க முடியாதுள்ளது.
இதன் காரணமாக கணக்காய்வாளருக்கு தமது செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாதுள்ளதாக தேசிய கணக்காய்வு சங்கம் தெரிவித்துள்ளது.
புதிய கணக்காய்வு சட்டமூலம் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டதையடுத்து அதற்கான அனுமதி கிடைத்தது.
அந்த அனுமதியின் பிரகாரம், இந்த சட்டமூலம், சாதாரண சட்டமூலமாக பாரளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும், சட்டமூலத்தினை வர்த்தமானியில் பிரசுரிக்கும் பொறுப்பு பிரதமரின் செயலாளருக்கு வழங்கப்பட்டது.
கணக்காய்வு சட்டமூலம் தொடர்பில் விடயங்களை ஆராய்வதற்காக 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி அமைச்சர் சரத் அமுனுகமவின் தலைமையிலான அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி சட்டமூல சீர்திருத்தத்திற்கு 23 பேர் கொண்ட அமைச்சரவை முன்வைக்கப்பட்டதுடன், சட்டமூலம் அரசியலமைப்புக்கு ஏற்புடையது என உறுதிப்படுத்தப்பட்டு சட்ட மாஅதிபரின் அனுமதி கிடைக்கப்பெற்றது.
எனினும் கணக்காய்வு சட்டமூலம் தொடர்பில் மேலும் கண்காணிப்பதற்காக அமைச்சர் சரத் அமுனுகமவின் தலைமையில் இந்த மாதம் 15 ஆம் திகதி மீண்டும் அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டது.
நல்லாட்சி அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவிருந்த தேசிய கணக்காய்வு சட்டமுலம் இன்னும் பிற்போடப்பட்டுள்ளதற்கான காரணம் என்ன?
Post a Comment
Post a Comment