சிறைச்சாலைகளில் இடப்பற்றாக்குறை காரணமாக கைதிகள் அசௌகியங்களுக்குள்ளாகியுள்ளனர்.
நகர்புரங்களிலுள்ள சிறைச்சாலைகளிலேயே இடப்பற்றாக்குறை காணப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டிலுள்ள 30 சிறைச்சாலைகளில் 18,500 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
1174 கைதிகளை தடுத்து வைக்கக்கூடிய கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் 3500கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
680 கைதிகளை தடுத்து வைக்கக்கூடிய வசிதிகளை கொண்ட பொரளை மெகசின் சிறைச்சாலையில் தற்போது 1200 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலையில் 1000 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த சிறைச்சாலையில் 380 கைதிகள் தடுத்து வைப்பதற்கான இடவசதியே உள்ளது.
இதேவேளை நீர்கொழும்பு சிறைச்சாலையில் 680 கைதிகள் மாத்திரமே தடுத்து வைக்ககூடிய வசதிகள் உள்ள நிலையில் , தற்போது 1100 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment
Post a Comment