அழுத்கம கலவரத்திற்கு நஷ்டஈடு!




2014 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்‌ஷ ஆட்சிகாலத்தில் ஏற்பட்ட அழுத்கம,பேருவள கறைபடிந்த வரலாற்று இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டு உயிரிளந்த மற்றும் காயமடைந்தோருக்கான நஷ்டஈடுகளை வழங்க அமைச்சரவை இன்று அனுமதியளித்துள்ளது!
புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து விவகார அமைச்சர், கௌரவ டி.எம். சுவாமிநாதன் அவர்களினால் முன்மொழியப்பட்ட பிரேரணைக்கு அமைவாகவே இந்த கொடுப்பனவுகளை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது!
இதற்கமைவாக பேருவளை மற்றும் அழுத்கம பகுதியில் உயிரிளந்த சுமார்
3 பேரின் குடும்பங்களுக்கு
தலா 20 லட்ச ரூபா நஷ்டஈடும்,
காயமடைந்த சுமார் 12 பேர்களுக்கு
தலா 5 லட்ச ரூபா நஷ்டஈடும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.