பேரறிவாளனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறேன்!




பேரறிவாளன் பரோலுக்கு பாடுபட்ட ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி என்று அவரது தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் சுமார் 26 ஆண்டுகளாக சிறையிலிருந்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை எழுந்து வருகிறது.
இந்தநிலையில் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையை பார்ப்பதற்கு ஒரு மாத காலம் பரோலில் விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளன் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.
நீண்ட காலத்துக்கு பின்னர் பேரறிவாளனை நேற்று ஒரு மாத கால பரோலில் தமிழக அரசு விடுவித்தது.
இந்த நிலையில் பேரறிவாளன் பரோலில் விடுதலையானதில் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் அவரது தாய் அற்புதம்மாள் அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து கூறிய அவர், 'பேரறிவாளனின் பரோல் தற்காலிக மகிழ்ச்சியைத் தருகிறது.
பேரறிவாளனை நிரந்தரமாக விடுதலை செய்ய வேண்டும்.
பேரறிவாளன் விடுதலைக்கு காரணமாக இருந்த ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நன்றி.
பேரறிவாளனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறேன்' என்று தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து அவருக்கு பெண் பார்க்கும் பணியில் அவரது தாயார் அற்புதம்மாள் ஈடுபட்டுள்ளார்